தீபா பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளின் தீபா பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரத்தில் நடந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளின் தீபா பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரத்தில் நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலடி.எஸ்.டி.சங்கர் தலைமை வகித்தார்.
இதில் மாநில ஆலோசகரும், முன்னாள் நகரமன்ற துணை தலைவருமான சம்பந்தம், காஞ்சீபுரம் மாவட்ட ஆலோசகர் எஸ்.கே.பி.சுப்பிரமணியம், கே.நாகராஜன், கே.ஜெயவேல், டி.குமார் என்கிற பக்தவச்சலம், மாநில ஒருங்கிணைப்பாளர் இராச.வெற்றிச்செல்வி, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
Next Story