காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2017 3:30 AM IST (Updated: 13 Feb 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் கஜலட்சுமி பேசியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுமார் 8,000 முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர் பதிவு செய்துள்ளனர். மேலும், 210 முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து புதுப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு அளிப்பது என்பது இயலாத நிலையில் உள்ளது. எனவே, அவர்கள் சுயவேலைவாய்ப்பு பெற்று அவர்களது மறுவாழ்வினை அமைத்துக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில், சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு இங்கு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் தங்கள் துறையின் மூலம் வழங்கப்படும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி, கடன் வசதி மற்றும் மானியம் ஆகியவை குறித்து அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சவுரிராஜன், உதவி இயக்குனர் சுரேஷ், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல் முருகன், உதவி இயக்குனர் (காதி மற்றும் கிராம தொழில்கள் நல வாரியம்) ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story