திருப்பூர், பல்லடம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வினர் ஆதரவு
திருப்பூர், பல்லடம் பகுதியில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டம்
அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பொதுச்செயலாளர் சசிகலா ஒரு அணியாகவும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் பிரிந்து தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு செல்போன் மற்றும் முகநூல், குறுஞ்செய்தி மூலமாக தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், நேற்றுகாலை திருப்பூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஒன்றிய, நகர நிர்வாகிகளை சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்தும், ஒவ்வொருவரின் நிலைபாடு குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதில் பெரும்பான்மையானவர்கள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. நிர்வாகிகள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ.
இது ஒருபுறம் இருக்க, பல்லடம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம் தலைமையில் நேற்று பல்லடம் ஒன்றிய பகுதியை சேர்ந்த தண்ணீர்பந்தல் நடராஜன், சொக்கப்பன், மணி, ஜெயந்தி, பக்தவச்சலம், சிவகுமார், எஸ்.எஸ்.மணி, பொன்னுசாமி, பழனிசாமி, கிரி மற்றும் நகர பகுதியை சேர்ந்த பானு பழனிசாமி, லட்சுமணன், சித்ராதேவி, ஒன்றிய மற்றும் நகர பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பல்லடம் காமராஜர் திடலில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
திருப்பூர்
இதேபோல் அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஆனந்தன், இணை செயலாளர்கள் சந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் நேற்றுகாலை தொண்டர்களுடன் திருப்பூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். தொகுதி மக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதற்கு மாறாக செயல்பட்டால் தொகுதிக்குள் அவர்களை வர விடமாட்டோம் என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் முருகசாமி, தெய்வசிகாமணி, நிர்வாகி ராயபுரம் மணி மற்றும் 60-வது வார்டு, 49-வது வார்டு, 42-வது வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கோரி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருப்பூரில் தொடங்கினார்கள்.

Next Story