மனவளர்ச்சி குன்றியவர்களுடன் கிரண்பெடி சந்திப்பு


மனவளர்ச்சி குன்றியவர்களுடன் கிரண்பெடி சந்திப்பு
x
தினத்தந்தி 13 Feb 2017 4:00 AM IST (Updated: 13 Feb 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

மனவளர்ச்சி குன்றியவர்களுடன் கிரண்பெடி சந்திப்பு: பரிவுடன் பேசி உற்சாகப்படுத்தினார்

புதுச்சேரி

புதுவை தேங்காய்த்திட்டு பகுதியில் குடிநீர் வினியோகம், குப்பை வாருவது உள்ளிட்டவை மோசமான நிலையில் இருப்பதாக கவர்னர் கிரண்பெடிக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து அவர் நேற்று காலை தேங்காய்த்திட்டு பகுதிக்கு சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். தங்கள் பகுதிகளில் குப்பைகளை கண்ட இடத்தில் வீசாமல் தூய்மையாக வைத்து இருக்குமாறு பொதுமக்களை கவர்னர் கேட்டுக்கொண்டார்.

அதன்பின் முருங்கப்பாக்கம் பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லத்துக்கு கவர்னர் சென்றார். அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த மனவளர்ச்சி குன்றியோரிடம் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார். தேவையான உதவிகள் அங்கு செய்து தரப்படுகிறதா? என்று அவர்களிடம் கவர்னர் பரிவுடன் கேட்டு தெரிந்து கொண்டார். தொடர்ந்து அவர்களிடம் சிறிதுநேரம் கிரண்பெடி கலந்துரையாடினார். அந்த இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். 

Next Story