மகளின் திருமணத்துக்கு பத்திரிகை கொடுக்க சென்ற பெற்றோர் மின்சார ரெயில் மோதி பலி


மகளின் திருமணத்துக்கு பத்திரிகை கொடுக்க சென்ற பெற்றோர் மின்சார ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 13 Feb 2017 3:00 AM IST (Updated: 13 Feb 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மகளின் திருமணத்துக்கு பத்திரிகை கொடுக்க சென்ற பெற்றோர் மின்சார ரெயில் மோதி பலி நுங்கம்பாக்கத்தில் பரிதாபம்

சென்னை,

சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 60). இவரது மனைவி அஞ்சலி தேவி (54). இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மகளின் திருமண தேதி முடிவானதை தொடர்ந்து, உறவினர்களுக்கு பத்திரிகை வினியோகம் செய்யும் பணியில் சின்னத்துரை–அஞ்சலி தேவி தம்பதியினர் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு பத்திரிகை வைக்க இருவரும் சென்றனர்.

உறவினர் வீட்டுக்கு விரைவாக செல்லவேண்டி நுங்கம்பாக்கம்–சேத்துப்பட்டு இடையே உள்ள தண்டவாள பகுதியை கடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற தாம்பரம்–கடற்கரை மின்சார ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story