போளூரில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு


போளூரில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 Feb 2017 4:15 AM IST (Updated: 13 Feb 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

போளூரில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

போளூர்,

கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம், போளூர் வசந்தம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழகத்தில் முதல்-அமைச்சராக பதவி ஏற்பது ஓ.பன்னீர்செல்வமா? அல்லது பொதுச்செயலாளர் சசிகலாவா? என பரபரப்பான அரசியல் சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வருகிறார். மேலும் முதல்-அமைச்சராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் என செய்தியாளர்களுக்கும் அவர் பேட்டியளித்தார்.

இதனால் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் தாக்கக்கூடும் என முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதல் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போளூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஒருவர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story