பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது
சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 341 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்டராம்பட்டு,
சாத்தனூர் அணை
திருவண்ணாமலையின் மிகப்பெரிய அணையாக விளங்கும் சாத்தனூர் அணை தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ளது. இந்த அணையின் மூலமாக திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதக்கடைசியிலோ அல்லது பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலோ பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
சாத்தனூர் அணையின் மொத்த உயரம் 119 அடி. மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடியாகும். கடந்த 2015-ம் ஆண்டு பெய்தமழையால் இந்த அணையில் முழு கொள்ளவும் தண்ணீர் நிரம்பியது. ஆனால் 2016-ம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையில் 91 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.
இதனிடையே பாசனத்திற்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தண்ணீர் திறப்பு
அதன்பேரில் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வலது மற்றும் இடதுப்புற கால்வாய்கள் மூலம் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சாத்தனூர் அணை வலதுப்புற கால்வாய் மூலம் வினாடிக்கு 215 கனஅடி தண்ணீரும், இடது புற கால்வாய் மூலம் வினாடிக்கு 126 கனஅடி வீதமும் தொடர்ந்து 30 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடுவதால் 88 ஏரிகள் நிரம்பி 7 ஆயிரத்து 543 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதியினை பெறுகிறது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 91 அடியாக உள்ளது. எனவே ஏரிப்பாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, பாசன சங்க தலைவர் ஜெயராமன், தாசில்தார் சஜேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதமால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜன், உதவி பொறியாளர்கள் கேசவராஜ், வாசுகி மற்றும் ரமேஷ் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story