விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்


விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
x
தினத்தந்தி 13 Feb 2017 4:00 AM IST (Updated: 13 Feb 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நடைபெற்ற போலீஸ்-பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி் பெற்றவர்களுக்கு பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வழங்கினார்.

திருவாரூர்,

விளையாட்டு போட்டிகள்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போலீஸ்-பொதுமக்கள் இடையே நல்லுறவை வளர்்க்கும் வகையிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இதில் கபடி, கைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் வடுவூர்் கபடி அணி, திருவாரூர் வேலுடையார் பள்ளி கைப்பந்து அணி, திரு.வி.க அரசு கலைக்கல்லூரி கிரிக்கெட் அணி ஆகியவை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர் சண்முகம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story