பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,
மாநாடு
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார்். கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன், மாநில தலைவர் காமராஜ், மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கூட்டணியின் ஓய்வு பெற்றோர் பிரிவு மாநிலத்தலைவர் சுப்பாராசு, மாநில பொருளாளர் மூர்த்தி, முன்னாள் மாநில தலைவர் இளங்கோ, நாகை மாவட்ட செயலாளர் லெட்சுமிநாராயணன், முன்னாள் மாநில பொருளாளர் வில்சன் பெர்னபாஸ், மாநில துணைத்தலைவர்கள் ராமசுப்ரமணியன், ஆல்பர்ட் சகாயராஜ், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானங்கள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக ஆசிரியர்களுக்கும் அமல்படுத்திட வேண்டும். தேசிய புதிய கல்வி கொள்கையினை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் பணியினை சேவையாக கருதி ஆசிரியர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆசிரியர் நியமனத்திற்காக தகுதித்தேர்வினை ரத்்து செய்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன் நன்றி கூறினார்.
பின்னர் மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 30-ந் தேதி கவர்னரிடம் நினைவூட்டல் கடிதம் வழங்கப்படும். தொடர்ந்து ஏப்ரல் 25-ந்தேதி வட்டார தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட 5 கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story