பாபநாசத்தில் காலில் அடிபட்டு கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

பாபநாசத்தில் காலில் அடிபட்டு கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2017 3:45 AM IST (Updated: 13 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் காலில் அடிபட்டு கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

பாபநாசம்,

பாபநாசம் பி.டி.ஓ. காலனியில் அழகிய ஆண் மயில் ஒன்று காலில் அடிபட்டு கிடந்தது. இதை பார்த்த பாபநாசம் மெர்லின் தொண்டு நிறுவன செயலாளர் வின்சென்ட், மயிலை மீட்டு பாபநாசம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பாபநாசம் தாசில்தார் திருமால் மூலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து மயிலை பார்வையிட்டனர். பின்னர் அந்த மயில், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story