75 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி,
75 ஆயிரம் குழந்தைகளுக்கு...
திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் களுக்கான கருத்து பட்டறை நடந்தது. இதனை கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் கடந்த 6-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த முகாம் வருகிற 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். இத்தடுப்பூசிபோடும் பணி வருகிற 28-ந் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தொடர்ந்து நடைபெறும்.
பாதுகாப்பானது
தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இப்புதிய தடுப்பூசி தொடர்பான எந்தவித புகார்களும் இதுவரை வரவில்லை. தடுப்பூசி தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. தனியார் மருத்துவ மனைகளில் ரூ.3 ஆயிரம் மதிப்பில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் அரசு முற்றிலும் இலவசமாக பள்ளிகளில் இந்த ஊசிகளை வழங்கி வருகிறது. எதிர்கால சமுதாயம் நோயற்ற சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு இத்தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. பள்ளி தலைமையாசிரியர்கள் இத்தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களை களைந்து, திருச்சி மாவட்டத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 34 குழந்தைகளுக்கும் 100 சதவீதம் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி வழங்குவதற்கான பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிகாரிகள்
கருத்து பட்டறையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர் வசந்தா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜேந்திரன், மாநகராட்சி சுகாதார அலுவலர் அல்லி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி உதவி திட்ட அலுவலர்கள் ராணி, கவுசல்யா, உதவி திட்ட மேலாளர் விக்னேஷ் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள், சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Next Story