தர்மபுரியில் துணிகரம்: ஓய்வு பெற்ற ஆசிரியர்- மூதாட்டியிடம் நகை பறிப்பு
தர்மபுரியில் ஓய்வு பெற்ற ஆசிரியர், மூதாட்டி ஆகிய 2 பேரிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி,
ஓய்வு பெற்ற ஆசிரியர்
தர்மபுரி மாவட்டம் அரூர் நரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னபையன்(வயது 65). ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர். இவர் தர்மபுரி பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சின்னபையனின் கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர்.
தர்மபுரி ஹரிஹரநாதசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமிகாந்தம்(68). மூதாட்டியான இவர் தர்மபுரி சீனிவாசராவ் தெருவில் உள்ள சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் லட்சுமிகாந்தத்தின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதனால் அந்த வழியாக சென்றவர்கள் மர்ம நபர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை.
தொடர் சம்பவம்
இந்த நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக சின்னப்பையன், லட்சுமிகாந்தம் ஆகியோர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். தர்மபுரி நகரில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story