அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 27 பேர் காயம்
நாமக்கல் அருகே அலங்காநத்தம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 27 பேர் காயம் அடைந்தனர்.
நாமக்கல்,
ஜல்லிக்கட்டு
நாமக்கல் அருகே உள்ள அலங்காநத்தம் கிராமத்தில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. முன்னதாக ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை அடையாளம் காணும் வகையில் மஞ்சள் நிறத்தில் பனியன் வழங்கப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், கரட்டுப்புதூர், போடிநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்த காளைகள், திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகள் என மொத்தம் 137 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 285 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர்.
தங்கம்-வெள்ளி காசுகள் பரிசு
பின்னர் மாடுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து விடப்பட்டன. அவை தங்களை அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. அதையும் மீறி காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசுகள், சைக்கிள், குடம், சில்வர் பாத்திரங்கள், வேட்டி-சட்டை மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் அடக்க முடியாத மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வாடிவாசலில் இருந்து வெளியே வரும் பெரும்பாலான மாடுகள் ஓட்டம் பிடித்து விட்டாலும், ஒருசில மாடுகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து, வீரர்களை பயமுறுத்தியதை காண முடிந்தது.
27 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி மொத்தம் 27 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் பழையபாளையம் பசுபதி (வயது 22), மங்களபுரம் சேரன் (24), சேலம் மாவட்டம் பெரிய கவுண்டம்பாளையம் சரத்குமார் (25) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 24 பேரும் லேசான காயங்களுடன் வீடு திரும்பினர்.
இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கண்காணித்தனர். ஜல்லிக்கட்டை காண எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும் திரளான பொதுமக்கள் அலங்காநத்தம் கிராமத்தில் திரண்டனர். அவர்கள் மாடுபிடி வீரர்களை கைதட்டியும், விசில் அடித்தும் உற்சாகப்படுத்தினார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
ஜல்லிக்கட்டையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலச்சந்திரன், உதவி கலெக்டர் ராஜசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சீனிவாசன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story