கரூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


கரூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2017 3:05 AM IST (Updated: 13 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

பாரதீய ஜனதா கட்சி கூட்டம்

கரூர் நகர பாரதீய ஜனதா கட்சி கூட்டம் கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சாய்விமல் முன்னிலை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் சிவசாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கரூரில், புதிய பஸ் நிலையத்தை உடனே அமைக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரில் உள்ள அனைத்து இலவச கழிப்பிடங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

கரூர் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, கால்வாய்களை தூர் வார வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம், இலவச காப்பீடு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். இரட்டை வாய்க்காலை தூர் வார வேண்டும். தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

கரூர் நகராட்சியில் அரசு பணிகள் செய்வதற்கு போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் பல திட்டங்கள் மக்களை சென்றடை வதில்லை. எனவே கரூர் நகராட்சியில் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story