கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் பழுதடைந்த அரசு டவுன் பஸ்களை சீரமைக்க வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் பழுதடைந்த அரசு டவுன் பஸ்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி,
டவுன் பஸ்கள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தர்மபுரி நகரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினமும் அரசு டவுன் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் இருந்து தர்மபுரி நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் டவுன் பஸ்களையே தங்கள் பயணத்திற்கு பிரதானமாக நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் தர்மபுரி நகரில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் கணிசமான டவுன் பஸ்கள் மிகவும் பழைய பஸ்களாக உள்ளன. இவற்றில் சில பஸ்களில் இருக்கைகள் பெயர்ந்தும், பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தும் காணப்படுகின்றன. இத்தகைய டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இத்தகைய பஸ்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பராமரிப்பு
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பகுதி மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால் நகர்ப்புறபகுதிகளுக்கு தினமும் வந்து செல்ல அரசு டவுன் பஸ்களையே முழுமையாக நம்பி உள்ளனர். இந்தநிலையில் கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இயக்கப்படுவதால் பாதி வழியிலேயே நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே கிராமப்புறங்களுக்கு செல்லும் பழுதடைந்த அரசு டவுன் பஸ்களை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story