கார்கள் நேருக்கு நேர் மோதல்; கணவன்-மனைவி பலி குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம்
கந்தர்வகோட்டை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதியதில், கணவன்-மனைவி இறந்தனர். மேலும் குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கந்தர்வகோட்டை,
கார்கள் நேருக்கு நேர் மோதல்
திருச்சி பொன்மலை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 50). இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் எலக்ட்ரீசியன் வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி கலா (45). இவர்களுக்கு திருமணமாகி சிவானி (12), சபரி (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் கந்தர்வகோட்டையில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று பாலமுருகன் தனது காரில் மனைவி கலா மற்றும் குழந்தைகள் சிவானி, சபரி ஆகியோரை அழைத்துக்கொண்டு திருச்சியில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி சென்றார்.
பின்னர் கந்தர்வகோட்டையில் உறவினர்களை பார்த்து விட்டு, அங்கிருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே புதுக்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (48), தனது மனைவி சுதா (40), உறவினர் வள்ளிக்கொடி (60), குழந்தைகள் தாரிகா(8), அஷ்ஷிதா(6) ஆகியோருடன் புதுக்கோட்டை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
கணவன்-மனைவி பலி
கந்தர்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, பாலமுருகன் குடும்பத்தினரும், பாலசுப்பிரமணியன் குடும்பத்தினரும் வந்த கார்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி பாலமுருகன், அவருடைய மனைவி கலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். பாலமுருகனின் குழந்தைகள் சிவானி, சபரி, பாலசுப்பிரமணியன், அவருடைய மனைவி சுதா, உறவினர் வள்ளிக்கொடி ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபாய குரல் எழுப்பினர்.
போலீசார் விசாரணை
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினரின் உதவியுடன், போலீசார் கார்களின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி இறந்த பாலமுருகன், கலா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாலசுப்பிரமணியனின் குழந்தைகள் தாரிகாவும், அஷ்ஷிதாவும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story