அரிமளம் அருகே கடியாப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம் மாடுகள் சீறிப்பாய்ந்தன


அரிமளம் அருகே கடியாப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம் மாடுகள் சீறிப்பாய்ந்தன
x
தினத்தந்தி 13 Feb 2017 4:15 AM IST (Updated: 13 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

அரிமளம் அருகே உள்ள கடியாப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின.

அரிமளம்,

மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கடியாப்பட்டியில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயம் கடியாப்பட்டி-ராயவரம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இதை முன்னாள் எம்.எல்.ஏ. ராம.சுப்புராம் தொடங்கி வைத்தார். போட்டி பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரியமாட்டிற்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரமும் பேட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டுவண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன.

பரிசுகள்

இதில் பெரிய மாடு போட்டியில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் வீரமதிசந்திரன் மாடும், இரண்டாம் பரிசை சிவகங்கை மாவட்டம் குண்டேந்தல்பட்டி பவதாரணி மாடும், மூன்றாம் பரிசை திருச்சி வெல்லம்தாங்கி அம்மன்செந்தில் பிரசாத் மாடும், நான்காம் பரிசை மதுரை சின்னமாங்குளம் அழகு மாடும் பெற்றன.

சின்ன மாடு போட்டியில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் கொழுக்கட்டைபட்டி மீராராவுத்தார் மாடும், இரண்டாம் பரிசை சிவகங்கை மாவட்டம் குண்டேந்தல்பட்டி பவதாரணி மாடும், மூன்றாம் பரிசை கடியாப்பட்டி பவதாரணி மாடும், நான்காம் பரிசை கே.புதுப்பட்டி அருகே உள்ள ஏத்தநாடு மாங்குடி சாத்தையனார் மாடும் பெற்றன. பின்னர் வெற்றி பெற்ற பெரிய மாடு, சிறிய மாடு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு பணி

இந்த மாட்டுவண்டி பந்தயத்தை திரளான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

முன்னதாக போட்டியில் கலந்து கொள்ள வந்த மாடுகள் தகுதி உடையனதா? என கால் நடைதுறையினரால் பரி சோதனை செய்யப்பட்டு பிறகு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாட்டுவண்டி பந்தயத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உத்தரவின் பேரில், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story