தொழில் முனைவோர் பெற்ற கடன் மீதான வட்டி-அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் பெற்ற கடன் மீதான வட்டி-அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிறு, குறு தொழில்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்,
சிறு, குறு தொழில்கள் சங்க கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க கூட்டம் கச்சேரி விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் உதய குமார் தலைமை தாங்கினார். லட்சுமணன்ராவ் வரவேற்றார். கவுரவ தலைவர் ராமசாமி, செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளதால் 25-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் ஒன்று சேர்ந்து தொழில் கூட்டமைப்பு (கிளஸ்டர்) ஏற்படுத்தி மத்திய அரசிடம் நிதி பெற்று தொழில்கள் தொடங்கி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மற்றும் தொழில் அபிவிருத்தி செய்வது. பிரதமர் நரேந்திரமோடி உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக பணப்புழக்கம் குறைந்துள்ளதால், சிறு, குறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன.
வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்
பெரம்பலூரை பொறுத்தவரை கட்டிடங்களுக்கு தேவையான கிரில் வேலைகள் அதிகம் நடக்கின்றன. கல் உடைக்கும் கிரசர் ஆலைகள் அதிகம் உள்ளன. தற்போது பத்திர பதிவுகள் ஏதும் நடைபெறாததால் புதிய தொழில்கள் தொடங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் மூலம் ஏற்கனவே கடன்பெற்று தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு வட்டி, அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தொகையை செலுத்த கால அவகாசத்தை அளித்து மத்திய அரசு உத்தரவிடவேண்டும். வங்கிகள் புதிதாக தொழில்கள் தொடங்க கடன்களை தாராளமாக வழங்கி பெரம்பலூர் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கிராவல் மண் அடிக்கடி திருடி செல்லப்படுகிறது. இதனை சிட்கோ அலுவலகம் தடுக்க வேண்டும். தொழில் புரிவோருக்கு குடிநீர் வசதி, கழிவு நீர்வாய்க்கால், தெருவிளக்குகள் பராமரிப்பு போன்ற அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செய்துதர வேண்டும். சிட்கோ வளாகத்தில் தளவாட பொருட்கள் அடிக்கடி திருட்டு போவதை தடுக்க நுழைவு வாயிலில் கிரில் கதவு அமைத்து காவல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ராஜேந்திரன், பிலவேந்திரன், ஏகாம்பரம், இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் அமீர்பாட்ஷா நன்றி கூறினார்.

Next Story