அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் சரமாரி வெட்டிக்கொலை 3 பேர் போலீசில் சரண்
திருவண்ணாமலையில் அ.தி.மு.க.முன்னாள் நகர செயலாளர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 3 பேர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர்
திருவண்ணாமலை கார்கானா தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). இவர் திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளராவார். நகரமன்ற முன்னாள் துணைத்தலைவராகவும் இருந்தார். தற்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பணியாற்றி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
கனகராஜ் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காந்திநகர் வேட்டவலம் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு காலை 6 மணியளவில் வீடு திரும்பினார்.
இவர் தினமும் காலை 6 மணியளவில் அரசு கலைக்கல்லூரிக்கு சென்று பேட்மிண்டன் விளையாடுவது வழக்கம். அதன்படி பேட்மிண்டன் விளையாடுவதற்காக நேற்று காலை 6.20 மணியளவில் அரசு கலைக்கல்லூரிக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் கண்ணதாசனுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டை கண்ணதாசன் ஓட்ட, கனகராஜ் பின்னால் அமர்ந்திருந்தார்.
மோட்டார்சைக்கிள் மோதல்
அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சனகோபுரம் அருகேயுள்ள வேகத்தடையில் மொபட் மெதுவாக ஏற முயன்றபோது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் திடீரென இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. உடனே அவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரிடம் தட்டிக் கேட்டனர்.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் திடீரென கையில் வைத்திருந்த அரிவாளால் கனகராஜை வெட்ட முயன்றனர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத கனகராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து கையில் அரிவாள் வைத்திருந்த 2 பேரும் கனகராஜை சரமாரியாக வெட்டினார்கள். அதனை கண்ணதாசன் தடுக்க முயன்றபோது மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் கண்ணதாசனை சரமாரியாக தாக்கினார். இதையடுத்து கண்ணதாசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.ஆனால் அரிவாள் வைத்திருந்த 2 பேரும் கனகராஜின் கழுத்தில் மாறி மாறி சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கனகராஜ் பரிதாபமாக பலியானார்.
இதனிடையே காலை நேரம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். தங்கள் கண் எதிரிலேயே கொலை நடந்ததை பார்த்த பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். அந்த பகுதியில் இருந்த கடைகளில் இருந்தவர்கள் கொலையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கதறல்
கனகராஜ் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவரின் உடலை பார்த்து கதறி அழுதார்கள். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவ இடத்தை வேலூர் டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
போலீசில் சரண்
இதனிடையே கனகராஜை கெலை செய்த 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் காந்திநகரை சேர்ந்த பங்க்பாபு (36), பழைய கார்கானா தெருவை சேர்ந்த ராஜா (28), சரவணன் (30) என தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. பிரமுகர் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story