முக்கடல் அணையில் மழை வேண்டி சிறப்பு பூஜை


முக்கடல் அணையில் மழை வேண்டி சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 Feb 2017 4:00 AM IST (Updated: 13 Feb 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

முக்கடல் அணையில் மழை வேண்டி சிறப்பு பூஜை

அழகியபாண்டியபுரம்,

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் துவரங்காட்டை அடுத்துள்ள முக்கடல் அணை முன்பு உள்ள இசக்கி அம்மன் கோவிலில் மழை வேண்டி கலச விளக்கு சிறப்புபூஜை நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் முக்கோணம் வடிவிலான குண்டம் மற்றும் அருங்கோணம் வடிவிலான சக்தி பீடங்கள் அமைத்து 108 மூலிகைகள் இட்டு பூஜை நடைபெற்றது. பின்னர், விநாயகர் பூஜை, நவகிரக பூஜை, பஞ்சபூதம் பூஜை, 1008, 108 மந்திரங்கள் கூறி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கலச நீரை பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்று முக்கடல் அணையில் ஊற்றி வழிப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் தலைவர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். நாகர்கோவில் நகராட்சி என்ஜினீயர் சுரேஷ்குமார் பூஜைகளை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை அசோக்குமார், சுப்பிரமணியம், நாகராஜன் உள்பட பலர் செய்திருந்தனர்.


Next Story