மாட்டு வண்டி பந்தயத்தை வேடிக்கை பார்த்த விவசாயி மாடு முட்டி சாவு
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள செய்துங்கநல்லூரானது, நெல்லைக்கு அருகாமையில் அமைந்த ஊராகும்.
நெல்லை,
நெல்லை அருகே செய்துங்கநல்லூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தின் போது, சாலையோரம் நின்றிருந்த கூட்டத்துக்குள் ஒரு மாட்டு வண்டி திடீரென புகுந்தது. அந்த வண்டியில் பூட்டப்பட்டு இருந்த மாடு முட்டி தூக்கி வீசியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
மாட்டு வண்டி பந்தயம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள செய்துங்கநல்லூரானது, நெல்லைக்கு அருகாமையில் அமைந்த ஊராகும். அந்த ஊரில் நம்பி கோவில் கொடை விழாவை முன்னிட்டு அந்த பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு வந்தது.
மாட்டு வண்டி பந்தயத்துக்கு தடை இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக போட்டி நடைபெறவில்லை.
தற்போது தடை நீக்கப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவில் கொடை விழாவையொட்டி நேற்று காலையில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
காலை 8 மணி அளவில், நெல்லை-திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பிருந்து போட்டி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 20 மாட்டு வண்டிகளுடன், வீரர்கள் கலந்து கொண்டனர். மாட்டு வண்டி பந்தயத்தை காண்பதற்காக செய்துங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சாலையின் இருபுறமும் திரண்டிருந்தனர்.
விவசாயியை மாடு முட்டியது
செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தைச் சேர்ந்த விவசாயி அந்தோணிசாமியும் (வயது 50) போட்டியை காண வந்திருந்தார். அவர் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையம் அருகே கூட்டத்துடன் கூட்டமாக நின்று, மாட்டு வண்டி பந்தயத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
போட்டி தொடங்கியதும் காளைகள் சீறிப் பாய்ந்ததால் மாட்டு வண்டிகள் சாலையில் வேகமாக ஓடத் தொடங்கின.
செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ராஜ்பாண்டியன் என்பவர் ஓட்டி வந்த மாட்டு வண்டி எதிர்பாராதவிதமாக கட்டுக்கடங்காமல் ஓடியது.
அந்த வண்டி போலீஸ் நிலையம் அருகே நின்றிருந்த மக்கள் கூட்டத்துக்குள் திடீரென புகுந்தது. இதனால் அப்பகுதியில் நின்றவர்கள், அலறி அடித்துக் கொண்டு சிதறி ஓடினர். அங்கு நின்று கொண்டிருந்த அந்தோணிசாமியை மாடு முட்டி தூக்கி வீசியது.
பரிதாப சாவு
இதில் சாலையில் வந்து விழுந்த அந்தோணிசாமி, தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அங்கிருந்த மக்களும், போலீசாரும் ஓடிவந்து அந்தோணிசாமியை மீட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்தோணிசாமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
அவரது உடல் ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. இதற் கிடையே அந்தோணிசாமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
மாட்டு வண்டி போட்டியின் போது மாடு முட்டியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி அந்தோணிசாமியை முட்டிய மாடு பூட்டப்பட்டு இருந்த வண்டிதான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story