“அமைச்சர் ராஜலட்சுமியை காணவில்லை என புகார்” திருவேங்கடம் போலீசில் அ.தி.மு.க.வினர் அளித்தனர்

“அமைச்சர் ராஜலட்சுமியை காணவில்லை என புகார்” திருவேங்கடம் போலீசில் அ.தி.மு.க.வினர் அளித்தனர்
x

அமைச்சர் ராஜலட்சுமியை காணவில்லை என்று திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினர்.

திருவேங்கடம்,

அமைச்சர் ராஜலட்சுமியை காணவில்லை என்று திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினர்.

போலீசில் புகார்

நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தில் அ.தி.மு.க. வினர் திரண்டு மெயின்ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அப்போது, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியபடி திருவேங்கடம் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தனர். அங்கு சற்று நேரம் முற்றுகையிட்டனர். பின்னர் அ.தி.மு.க. வக்கீல் அணி மாவட்ட துணை செயலாளர் தாசன் தமிழ், போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில், “சங்கரன்கோவில் தொகுதியில் வறட்சி நிவாரணம் குறித்த பணியை விரைந்து முடிக்க வேண்டி கடந்த 5-ந் தேதி சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமியை தேடிச் சென்றோம். ஆனால் அவரை காண வில்லை.

எனவே அமைச்சர் ராஜலட்சுமியை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்“ என்று கூறப்பட்டுள்ளது.

புகாரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பெற்றுக் கொண்டார்.

பின்னர் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story