சென்னை குடிநீர் வாரியத்தில் 322 காலியிடங்கள்
சென்னை குடிநீர் - வடிகால் வாரியத்தில் 322 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஒரு தமிழக அரசு நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் டெபுட்டி கண்ட்ரோலர் (நிதி), சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், அசிஸ்டன்ட் என்ஜினீயர், ஜூனியர் அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் டெபுட்டி கண்ட்ரோல் பணிக்கு 6 பேரும், சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு 3 பேரும், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணிகளுக்கு 158 பேரும், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 155 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகை அளிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி வேறுபடுகிறது. சி.ஏ., சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள், பி.காம், பி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணி உள்ளது.
கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி. (ஏ.), எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 6-3-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.chennaimetrowater.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Next Story