டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை


டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை
x
தினத்தந்தி 13 Feb 2017 8:30 PM IST (Updated: 13 Feb 2017 1:30 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று பி.இ.சி.எல். இந்த நிறுவனம் தகவல் ஒலிபரப்பு சம்பந்த மான பொறியியல் பணிகளை கவனிக்கிறது.

தற்போது இந்த அமைப்பில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 113 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆங்கிலப் பிரிவில் 98 பேரும், இந்தி பிரிவில் 15 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பட்டப்படிப்பு அல்லது பிளஸ்-2 தேர்ச்சியுடன், தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த கட்டணம் டி.டி.யாக இணைக்கப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும்.

Assistant General Manager (HR), BECIL Bhawan, C56/A17, Sector62, Noida201 307 (U.P) என்ற முகவரிக்கு 1-3-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்ற டைய வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.becil.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Next Story