தமிழக அரசில் 2804 நர்ஸ் பணியிடங்கள் பெண்களுக்கு வாய்ப்பு
தமிழக அரசு மருத்துவ துறையில் 2804 நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிப்ளமோ படித்த பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
தமிழக அரசின் மருத்துவ துறை சார்ந்த பணியிடங்களை நிரப்ப மருத்துவ சேவைப் பணிகள் தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கிராம நல செவிலியர்/ துணை செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 2804 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஒப்பந்தம் அடிப்படையிலான பணியிடங்களாகும்.
இட ஒதுக்கீடு வாரியான பணியிடங்கள் விவரம் : பொது - 877, பி.சி. - 679, பி.சி.(எம்) -90, எம்.பி.சி./டி.சி. - 594, எஸ்.சி. - 422, எஸ்.சி.(ஏ) - 109, எஸ்.டி. - 33.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். வயது வரம்பு விலக்கு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர் களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
கல்வித் தகுதி:
அங்கீகாரம் பெற்ற நர்சிங் பயிற்சிக் கல்லூரி களில் நர்ஸ் மிட் வைப், மல்டி பர்பஸ் ஹெல்த் ஒர்க்கர்ஸ் சான்றிதழ் படிப்பு படித்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் மிட்வைப் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பதுடன், குறிப்பிட்ட உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டண விதிவிலக்கு பெறும் பிரிவினர் ரூ.250 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-2-2017-ந் தேதியாகும். நேரடியாக வங்கிக் கிளையில் கட்டணம் செலுத்துபவர்கள்
28-2-2017-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: www.mrb.tn.gov.in.

Next Story