சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
குடிநீர் பற்றாக்குறை
பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு சமத்துவபுரம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை தற்போது வினியோகம் செய்யப்படும் குடிநீரானது மக்களுக்கு போதுமானதாக இல்லை. குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நகராட்சி அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் சமத்துவபுரம் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் வீடுகளுக்கு காவிரி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை சமத்துவபுரம் மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் காலிக்குடங்களை கையில் ஏந்தியிருந்தனர். பின்னர் அவர் கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சமத்துவபுரம் பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை பிடிக்க மக்கள் ஒரே நேரத்தில் கூடுவதால் தண்ணீர் உடனடியாக தீர்ந்து விடுகிறது. எனவே ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளை அமைத்து கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கோடைகாலம் நெருங்கி வருவதால் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Next Story