சிவகங்கை அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்
சிவகங்கை அருகே கண்டுப்பட்டி, செங்குளிப்பட்டியில் அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை அருகே உள்ள கண்டுப்பட்டி செங்குளிப்பட்டி புனித பழைய அந்தோணியார் ஆலய மஞ்சுவிரட்டு திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராட்டம் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவப்படுத்தும் வகையிலும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. கண்டுப்பட்டி–பாகனேரி சாலையில் முதலில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடுகள், நடுநிலை மாடுகள், சின்ன மாடுகள் என 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 9 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2–வது பரிசை நகரம்பட்டி கண்ணன் வண்டியும், 3–வது பரிசை பனங்குடி சேவியர் வண்டியும் பெற்றது.
நடுநிலை மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 4 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புதுப்பட்டி மணி வண்டியும், 2–வது பரிசை விராமதி சந்திரன் வண்டியும் பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் மொத்தம் 13 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை பில்லமங்கலம் வாசுதேவன் வண்டியும், 2–வது பரிசை கண்டுப்பட்டி மணிமுத்து வண்டியும், 3–வது பரிசை கொட்டக்குடி பாலுச்சாமி வண்டியும் பெற்றது.
குதிரை வண்டிஇதன்பின்னர் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 9 குதிரை வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை ஈரோடு பவானிமோகன் குதிரை வண்டியும், 2–வது பரிசை புதுக்கோட்டை வேலன் சன்ஸ் குதிரை வண்டியும், 3–வது பரிசை மேட்டுப்பட்டி குமார் குதிரை வண்டியும் பெற்றது. இந்த பந்தயங்களுக்கான ஏற்பாடுகளை கண்டுப்பட்டி மற்றும் செங்குளிப்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.