தேவகோட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட 27–வது வார்ட்டில் உள்ள முத்துராமன் தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் கோபுரம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட 27–வது வார்ட்டில் உள்ள முத்துராமன் தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் கோபுரம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. அப்போது அங்கு கூடிய முத்துராமன் தெரு பொதுமக்கள், செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் ஆகியோர் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் சகர்நிஷா பேகம், ஜாகீர் உசேன் மற்றும் மகேந்திரன், காசி கோனார் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேச்சுவார்த்தையின்போது, தற்காலிகமாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.