ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் கருணாகரன் வழங்கினார்
நெல்லையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கருணாகரன் வழங்கினார். குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நேற்று
நெல்லை,
நெல்லையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கருணாகரன் வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதல்– அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அரபு நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இடிந்தகரையைச் சார்ந்த மீனவர் தாமஸ் என்பவருக்கு மறுவாழ்வு வகைக்காக ரூ.2 லட்சமும், தெற்கு வீரவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெயரஞ்சினி என்பவர் பாம்பு கடித்து இறந்ததற்காக அவரது தந்தை கோபல் என்பவரிடம் ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வேளாண்மை உதவித் தொகையும், பாளையங்கோட்டை தாலுகா சிவந்திபட்டி மற்றும் பர்ப்பநாதபுரம் கிராமத்தைச் சார்ந்த 2 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 8 பேருக்கு புதிய குடும்ப அட்டை என மொத்தம் 13 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்டத்துக்கான காசோலையை கலெக்டர் கருணாகரன் வழங்கினார்.
மாணவர்களுக்கு பரிசுமேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில், 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 8 ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) தண்டபாணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.