பன்றி காய்ச்சல் குறித்து ரெயில் நிலையங்களில் விழிப்புணர்வு முகாம்
பன்றி காய்ச்சல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை,
பன்றி காய்ச்சல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலும் விழிப்புணர்வு முகாம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சென்னை மாநகராட்சி மற்றும் ரெயில்வே சுகாதாரப் பிரிவு இணைந்து நடத்தும் இந்த விழிப்புணர்வு முகாம்களில் பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வினியோகிக்கப்படும். மேலும் இந்த முகாமில் மாநகராட்சி மருத்துவர்கள் ஷிப்ட் முறையில் செயல்படுவார்கள். அவர்களிடம் பயணிகள் தங்களுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது போன்ற அறிகுறிகள் தெரிந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் இருந்தாலோ நேரடியாக சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையில் இந்த முகாம்கள் செயல்படும்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காற்றில் பரவும் தன்மை கொண்ட பன்றி காய்ச்சலை தடுப்பதற்காக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சென்னை எழும்பூர், சென்டிரல் மற்றும் விமான நிலையம் ஆகிய 3 இடங்களில் இந்த முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. நோயின் தாக்கம் முற்றிலுமாக நீங்கும் வரையில் முகாம்கள் செயல்படும். பொது மக்கள் எந்த வித தயக்கமின்றி முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story