தூத்துக்குடியில் சசிகலா– ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வக்கீல்கள் தனித்தனியாக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி கோர்ட்டு முன்பு சசிகலா ஆதரவு வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவர்னரிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கொடுத்து, ஆட்சி அமைக்க அழைக்குமாறு சசிக
தூத்துக்குடி,
தூத்துக்குடி கோர்ட்டு முன்பு சசிகலா ஆதரவு வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவர்னரிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கொடுத்து, ஆட்சி அமைக்க அழைக்குமாறு சசிகலா கோரிக்கை விடுத்து உள்ளார். ஆனால் இதுவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்கவில்லை. ஆகையால் உடனடியாக ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான அ.தி.மு.க. வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவர் செல்வக்குமார் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க வேண்டும், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வக்கீல் பிரிவு துணைச்செயலாளர்கள் ரவீந்திரன், சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், வடக்கு பகுதி கழக மாவட்ட பிரதிநிதி முனியசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.