தாம்பரம் ரெயில்வே பணிமனை அருகே தீவிபத்து


தாம்பரம் ரெயில்வே பணிமனை அருகே தீவிபத்து
x
தினத்தந்தி 14 Feb 2017 2:53 AM IST (Updated: 14 Feb 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில்நிலைய வளாகத்தில் வார்தா புயலின்போது முறிந்துவிழுந்த மரங்கள் மற்றும் தேவையற்ற கழிவு பொருட்களை ரெயில்வே பணிமனையின் அருகே போட்டுவைத்திருந்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில்நிலைய வளாகத்தில் வார்தா புயலின்போது முறிந்துவிழுந்த மரங்கள் மற்றும் தேவையற்ற கழிவு பொருட்களை ரெயில்வே பணிமனையின் அருகே போட்டுவைத்திருந்தனர். நேற்று மதியம் அந்த இடத்தில் திடீரென தீப்பற்றி மளமளவென அங்கிருந்த மரக்கழிவுகளுக்கு பரவி எரியத்தொடங்கியது.

இந்த தீவிபத்தால் அந்த பகுதி ஜி.எஸ்.டி. சாலையில் புகை சூழ்ந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீவிபத்து குறித்து ரெயில்நிலைய ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. 

Next Story