இன்று காதலர் தினம் மெரினாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


இன்று காதலர் தினம் மெரினாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Feb 2017 2:57 AM IST (Updated: 14 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

காதலர்கள் தினத்தையொட்டி இன்று சென்னையில் மெரினா உள்பட காதலர்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

காதலர்கள் தினத்தையொட்டி இன்று சென்னையில் மெரினா உள்பட காதலர்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மீறினால் நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காதலர் தினம்

ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந்தேதி அன்று உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காதலர் தினம் என்பதால் சென்னையிலும் காதல் ஜோடிகள் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

சென்னை மெரினா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் காதல் ஜோடிகள் கூடி தங்கள் மகிழ்ச்சியை வாழ்த்துகள் மூலம் தெரிவித்து கொள்வார்கள்.

எல்லை மீறக்கூடாது

இதையொட்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காதலர்கள் பொது இடங்களில் கண்ணியமாக காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட தடை இல்லை என்றும், எல்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story