பெங்களூரு மாநகராட்சியில் அனைத்து மட்டத்திலும் ஊழல் நடக்கிறது எடியூரப்பா குற்றச்சாட்டு
பா.ஜனதா கட்சியின் பெங்களூரு நகர மாவட்ட செயற்குழு கூட்டம் பெங்களூரு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பெங்களூரு,
பா.ஜனதா கட்சியின் பெங்களூரு நகர மாவட்ட செயற்குழு கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெங்களூருவில் நமது கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள், 101 கவுன்சிலர்கள் உள்ளனர். இவ்வளவு பலம் நமக்கு இருந்தும் மாநில அரசின் தோல்விகளுக்கு எதிராக தேவையான போராட்டங்களை நடத்தவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிடுகிறேன். மாநகராட்சியில் ஊழல் அதிகமாக நடக்கிறது. குப்பையை நிர்வகிக்கும் நிதியில் இருந்து அனைத்து மட்டத்திலும் ஊழல் நடக்கிறது. இன்னும் தொகுதிகளில் பல பிரச்சினைகள் உள்ளன. இதற்கு எதிராக தொகுதி அளவில் போராட்டங்களை நடத்த வேண்டும். நகரில் உள்ள சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நமது கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு தேவை இல்லாத தொல்லைகளை கொடுப்பதாக என்னிடம் கூறினார்கள்.
இதில் பா.ஜனதா நகர மாவட்ட நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும். கட்சியை மேலும் பலப்படுத்த நிர்வாகிகள் அனைவரும் இணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய மத்திய மந்திரி அனந்தகுமார், “முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவை புறக்கணித்துவிட்டார். வரும் நாட்களில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதற்கு என்ன நடவடிக்கையை சித்தராமையா எடுத்துள்ளார் என்பதை சொல்ல வேண்டும். இதற்கு எதிராக பா.ஜனதா போராட்டம் நடத்தும்“ என்றார். இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story