சேலத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தும், பொய் புகார் கூறிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்
சேலம்,
அரசு அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தும், பொய் புகார் கூறிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாரதி, பொருளாளர் ராஜாராம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் வட்ட தலைவர் எஸ்.முகமதுகாசிம், நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில தலைவர் சம்பத்குமார் உள்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்களை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.