மூலக்குறிச்சி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் மனு


மூலக்குறிச்சி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

மூலக்குறிச்சி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் நேற்று கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல்,

கலெக்டரிடம் மனு

தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நல அமைப்பின் தலைவர் குப்புசாமி தலைமையில் மூலக்குறிச்சி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி ஊராட்சியில் பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. தற்போது இந்த டாஸ்மாக் கடையை மூலக்குறிச்சி ஊராட்சிக்கு மாற்றி உள்ளனர்.

இடமாற்றம் செய்ய வேண்டும்

இந்த மதுபான கடை அருகில் காமராஜ் நகர், ஏரிக்கரை ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வழியாகத்தான் கொல்லிமலைக்கு செல்லும் அனைத்து பஸ்களும் சென்று வருகின்றன. சாலை அருகில் மதுபான கடை இருப்பதால் அனைவரும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபான கடையால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். 

Next Story