ஓசூர் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர்,
ஓசூர் அருகே அரசனட்டி பாரதி நகரில் உள்ள ரேஷன் கடையில் முறைகேடு நடந்து வருவதாக கண்டனம் தெரிவித்து, அக்கடை முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
இதையொட்டி பாரதி நகர் ரேஷன் கடையில் பொருட்களை சரியாக வினியோகிப்பதில்லை, பெரும்பாலான நாட்கள், இருப்பு இல்லை என கூறி அனுப்பி விடுகின்றனர். மேலும், ரேஷன் பொருட்களை திருட்டுத்தனமாக விற்பதாகவும், குடும்ப அட்டைதாரர்கள் மிரட்டப்படுவதாகவும், இந்த கடையில் நிலவும் முறைகேடுகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில், ஒன்றிய தலைவர் நாகேஷ் நன்றி கூறினார்.

Next Story