கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் மனு


கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:00 AM IST (Updated: 14 Feb 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் மனு

கிருஷ்ணகிரி,

சூளகிரி தாலுகா சானமாவு கிராமம் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சானமாவு கிராமத்தில் வசிக்கும் 41 ஆதி திராவிடர் குடும்பத்திற்கு வீட்டு மனை வழங்கும் அரசின் திட்டத்தின் பேரில், நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த 1999-ம் ஆண்டு தனித்தனியாக அன்றைய தர்மபுரி மாவட்ட கலெக்டரால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் தனித்தனியாக 41 குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.

நிலத்தை எங்களுக்கு காட்டி வீட்டுமனையாக பிரித்து கொடுக்கவில்லை. வருவாய்த்துறையின் நில பதிவுகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் நாங்கள் குடியேறி வீடு கட்ட முடியவில்லை. இந்த நிலையில் அரசின் நிலம் எடுப்புக்கு எதிராக சிலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் எங்களுக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டது.

எங்களுக்கு எதிராக தீர்ப்பு கிடைத்த போதிலும் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 15 ஆண்டுகளாக நாங்கள் வறுமையில் உள்ளோம்.

மேலும் குடிசை அமைத்து நெருக்கடியில் வாழ்கிறோம். எனவே ஆதி திராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டபடி எங்களுக்கு வீட்டுமனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story