குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம்
குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்துதான் வாங்க வேண்டி உள்ளது. குடிநீர் கேட்டு அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்றால் அந்த பகுதி மக்கள் குடிநீர் தர மறுப்பு தெரிவிக்கின்றனர். எனவே எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியாறு அணை
பாலக்கோடு ஒன்றியம் பெலமாரனஅள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட மயானம் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. மேலும் எங்களுக்கு மயானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை முறையாக சர்வே செய்து சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் மல்லையன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கிராமங்களில் குடிநீர் பிரச்சினை, கால்நடைகளுக்கு தீவன பயிர் இல்லா நிலை உருவாகி உள்ளது. வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் அந்த பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும். எனவே வாணியாறு அணையில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Next Story