நெல்லை அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


நெல்லை அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2017 3:34 AM IST (Updated: 14 Feb 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

நெல்லை,

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி ஆறுமுகத்தம்மாள். இவர், தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் தாழையூத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். கரையிருப்பு அருகே வந்து கொண்டு இருந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர், ஆறுமுகம் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய ஆறுமுகமும், ஆறுமுகத்தம்மாளும் கீழே விழுந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள், இருவரிடமும் அரிவாளை காட்டி மிரட்டி, ஆறுமுகத்தம்மாள் அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். பின்னர், அந்த 3 மர்ம மனிதர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story