தஞ்சையில் தலையில் கல்லை போட்டு காவலாளி படுகொலை போலீஸ் விசாரணை
தஞ்சையில் தலையில் கல்லை போட்டு காவலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
காவலாளி
தஞ்சை பில்லுக்காரத் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது62). இவர் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் கல்லணைக்கால்வாய் மேல் கரையில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். தினமும் இரவு 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மறுநாள் காலை 7 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி பால்ராஜ் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை கடைமுன்பு பால்ராஜ் படுத்திருந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் கல்லை தூக்கிப்போட்டு தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் பால்ராஜ் உடல் அருகில் இருந்த நாற்காலியிலும் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும் உடல் அருகே டியூப்லைட், மதுபாட்டில்கள் உடைந்த நிலையில் கிடந்தன.
கொலையாளிகளுக்கு வலைவீச்சு
இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ராஜராஜன் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கொலை செய்த கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மது அருந்தியவர்களுடன் தகராறு?
பால்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு எதிரே கல்லணைக்கால்வாய் கரையில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவார்கள். அவ்வாறு மது அருந்தும் போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். அதன்படி கல்லணைக்கால்வாய் கரையில் மது அருந்தியவர்களுடன் ஏற்பட்ட தகராறில் பால்ராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் கள்.

Next Story