தஞ்சை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரேநாளில் 27 பேர் கைது


தஞ்சை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரேநாளில் 27 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2017 3:34 AM IST (Updated: 14 Feb 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரேநாளில் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

போலீஸ் சோதனை

தமிழகத்தில் பதற்றமான அரசியல் சூழ்நிலை நிலவி வருவதையடுத்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் சார்பில் அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இந்த வாகன சோதனை நடத்தப்பட்டது.

27 பேர் கைது

இந்த சோதனையில் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரேநாளில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 9 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். மீதி உள்ள 18 பேர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆவர். 

Next Story