வல்லத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு


வல்லத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

வல்லத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வல்லம் தெற்கு மேட்டுத் தெருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள், இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளதையும், பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதையும், கால்நடை துறையின் மூலம் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இட வசதிகளையும் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். இதேபோல, ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள் பற்றிய விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, வட்டாட்சியர் குருமூர்த்தி, கால்நடைத்துறை இணை இயக்குனர் மாசிலாமணி மற்றும் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர். 

Next Story