திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா மாடுகள் முட்டி 25 பேர் படுகாயம்
திருப்பத்தூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்,
எருது விடும் விழா
திருப்பத்தூர் அருகே உள்ள பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. இதில் திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு, ஆலங்காயம், மிட்டூர், வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு, முல்லை, பர்கூர், நாட்டறம்பள்ளி, கந்திலி, கசிநாயக்கன்பட்டி மற்றும் ஏலகிரிமலை ஆகிய பகுதிகளில் இருந்து 108 காளைகள் பங்கேற்றன. முதலில் கோவில் காளையை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., வாடி வாசலில் இருந்து தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக விடப்பட்டன. அவை ஒவ்வொன்றும் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. விழாவை காண திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
உதவி கலெக்டர் ஆய்வு
எருது விடும் விழாவை யொட்டி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து உள்ளார்களா? என திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயன், போலீஸ் துணை சூப்பிரண்டு பன்னீர்செல்வம், கால்நடை துறை இணை இயக்குனர் பாரதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
குறிப்பிட்ட தூரத்தை வேகமாக ஓடிய காளைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கே.எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். ஊர் கவுண்டர் கோவிந்தராஜ் வரவேற்றார். முதலிடம் பிடித்த புதுப்பேட்டையை சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு முன்னாள் துணைத் தலைவர் தாமரைசெல்வன் ரூ.25 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ஆறுமுகம் ரூ.19 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு முன்னாள் தலைவர் சின்னராசு ரூ.17 ஆயிரமும் வழங்கினர்.
25 பேர் படுகாயம்
எருது விடும் திருவிழாவை காண வந்தவர்கள் மீது காளைகள் முட்டியதில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story