எம்.கண்ணனூர் கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு


எம்.கண்ணனூர் கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:30 AM IST (Updated: 14 Feb 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

எம்.கண்ணனூர் கிராமத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கல்லக்குடி,

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் எம்.கண்ணனூர் கிராமத்தில் நாளை(புதன்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கிராம மக்கள் முடிவு செய்து திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமியை சந்தித்து அனுமதி கோரினார்கள். கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், வாடிவாசல் அமைப்பது குறித்தும் கிராம முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை கூட்டம் லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் நேற்று கலெக்டர் பழனிசாமி எம்.கண்ணனூர் கிராமத்திற்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். அப்போது லால்குடி கோட்டாட்சியர் மணிவண்ணன், தாசில்தார் ஜவகர்லால் நேரு, போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Next Story