குடிநீர் திட்டத்திற்கு காவிரி ஆற்றில் ஆழ்குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் சங்க தலைவர் கைது
திருச்சி கம்பரசம்பேட்டை குடிநீர் திட்டத்திற்கு காவிரி ஆற்றில் ஆழ்குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
உண்ணாவிரதம்
திருச்சி கம்பரசம்பேட்டை காவிரி ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஆழ்குழாய் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
அவரது உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அப்போது அவருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கடும் வறட்சி
முன்னதாக சின்னதுரை நிருபர்களிடம் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் கம்பரசம்பேட்டையில் காவிரி ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஆழ்குழாய் அமைத்தால் தினமும் 27 ஆயிரம் கோடி கன லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படும். ஸ்ரீரங்கம் பகுதியில் ஏற்கனவே வறட்சியால் மரம், செடி, கொடிகள் அனைத்தும் கருகி விட்டது. கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் மேலும் பயிர்கள் கருகிவிடும். எனவே இத்திட்டத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுடன் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் சாகும்வரை போராட்டம் தொடரும்” என்றார். கோரிக்கை தொடர்பாகவும் கலெக்டர் அலுவலகத்தில் அவர் மனு கொடுத்தார்.

Next Story