முதல்-அமைச்சரை நியமிக்ககோரி கவர்னர் மாளிகை முன்பு நாளை விவசாயிகள் தற்கொலை செய்யும் போராட்டம்
முதல்-அமைச்சரை நியமிக்ககோரி கவர்னர் மாளிகை முன்பு நாளை தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்போவதாக திருச்சியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
திருச்சி,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் ஆகியோர் மனுக்களை பெற்றனர். மனு கொடுப்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலர் திரண்டு வந்தனர்.
அப்போது வக்கீல் அய்யாக்கண்ணு, கழுத்தில் தூக்கு கயிறை மாட்டியபடியும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தையும் கையில் கொண்டு வந்திருந்தார். கயிற்றை அகற்றும்படியும், பூச்சி கொல்லி மருந்து டப்பாவை வாங்கவும் போலீசாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா, அய்யாக்கண்ணு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றினார். கையில் வைத்திருந்த பூச்சி மருந்து டப்பாவையும் வாங்கி கொண்டார்.
தற்கொலை போராட்டம்
விவசாயிகள் சார்பில் அவர் கொடுத்த மனுவில், “ தற்போது தமிழக அரசு முடங்கி உள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் மனமுடைந்து தற்கொலை செய்யும் அளவில் உள்ளனர் எனவும், எனவே இன்றுக்குள் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும் அல்லது கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் நாளை (புதன்கிழமை) கவர்னர் மாளிகை முன்பு தூக்கு மாட்டி தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தப்படும்” என கூறியிருந்தார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பொதுமக்கள் பலர் திரண்டு வந்து அளித்த மனுவில், “எடமலைப்பட்டிபுதூரில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள காளிகாபரமேஸ்வரி கோவிலில் கடந்த 2 வருடங்களாக மாசி திருவிழா நடைபெறவில்லை. அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.
தூக்க மாத்திரைகளுடன்...
திருச்சி நவல்பட்டு போலீஸ் காலனி அருகே அண்ணாநகரை சேர்ந்த அப்துல்கரீம் (வயது75), அவரது மனைவி பக்ருநிஷா (68) ஆகியோர் மனு கொடுக்க வந்திருந்தனர். இதில் பக்ருநிஷா கையில் தூக்க மாத்திரைகளுடன் வந்திருந்தார். தனது 2-வது மகன் தன்னிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிப்பதாகவும், மகனிடம் இருந்து பணம் மற்றும் நகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்க வந்திருப்பதாகவும், இல்லையெனில் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்தனர். அதன்பின் கலெக்டரிடம் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். தூக்க மாத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்ரீரங்கம் சங்கர் நகரை சேர்ந்த சிவராஜ் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் பொது வழி பாதை மற்றும் வழிபாட்டு இடத்தை சிலர் விற்க முயற்சி செய்து வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தனர்.
மரங்களை வெட்ட எதிர்ப்பு
தண்ணீர் அமைப்பு தலைவர் சேகரன், நிாவாகிகள் நீலமேகம், இளங்கோ ஆகியோர் அளித்த மனுவில், “செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பழமையான 2 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி புதிய கட்டிடங்கள் கட்ட முயற்சி நடந்து வருகிறது. மரங்களை வெட்டுவதை தவிர்த்து பழைய சிதிலமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்” என கூறியிருந்தனர். லால்குடி சிறுதையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் லால்குடி அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகேயும், சாலையை ஆக்கிரமித்துள்ள இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும், அந்த கடைகளில் இருந்து துர்நாற்றம் வருவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற அதிகாரிகள் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கூடுதல் பாதுகாப்பு
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட நேற்று கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. கடந்த வாரம் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் நேற்று நடந்த கூட்டத்தில் மனு கொடுக்க மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

Next Story