சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.78 லட்சத்தை தாண்டியது


சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.78 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 14 Feb 2017 4:00 AM IST (Updated: 14 Feb 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.78 லட்சத்தை தாண்டியது. தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ஒரே நாளில் ரூ.21 லட்சம் கிடைத்து உள்ளது.

சமயபுரம்,

சமயபுரம் மாரியம்மன்

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

ரூ.78 லட்சம்

அதன்படி, நேற்று மாரியம்மன் கோவில் இணை ஆணையர் தென்னரசு, திருவானைக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ஜெயப்பிரியா, புதுக்கோட்டை உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.78 லட்சத்து 980 ரொக்கமும், 1 கிலோ 944 கிராம் தங்கமும், 4 கிலோ 896 கிராம் வெள்ளியும், மேலும் அயல்நாட்டு பணம் 98-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் டிக்கெட் எடுத்து தரிசனம் செய்த வகையில் ரூ.20 லட்சத்து 94 ஆயிரத்து 674 ரூபாய் கிடைத்துள்ளது என்றும், ஒரே நாளில் டிக்கெட் விற்பனை மூலம் இவ்வளவு ரூபாய் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என்றும் கோவில் இணை ஆணையர் தெரிவித்தார். 

Next Story