பாலக்கோட்டில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாலக்கோட்டில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு,
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாதப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சின்னபையன், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், தினக்கூலியாக ரூ.400-ம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பாலக்கோடு ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
வீட்டுமனை பட்டா
பஞ்சப்பள்ளி ஊராட்சியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் குப்புசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story