உங்களுடன் நான் நிகழ்ச்சி: திருவாரூரில் விஜயகாந்துடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்தனர்


உங்களுடன் நான் நிகழ்ச்சி: திருவாரூரில் விஜயகாந்துடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்தனர்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:00 AM IST (Updated: 14 Feb 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

உங்களுடன் நான் நிகழ்ச்சியில் திருவாரூரில் விஜயகாந்துடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்தனர்.

திருவாரூர்,

சுற்றுப்பயணம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். அதன்படி நேற்று காலை கும்பகோணத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் வந்தார். நாகை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த உங்களுடன் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கட்சி தொண்டர்களுடன், அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். நீண்ட வரிசையில் கட்சி தொண்டர்கள் குடும்பத்துடன் காத்திருந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்தையா, மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர், நகர செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story